ஜனாஸாவை அடக்கம் செய்யும் போது மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட வேண்டுமா❓

 *ஜனாஸாவை அடக்கம் செய்யும் போது மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட வேண்டுமா❓*


*அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர்.*


இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள் பலவீனமாக இருந்தாலும் *கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது.*


*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.*


அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: *இப்னு மாஜா 1554*


இவ்வாறு மண் அள்ளிப் போடும் போது *மின்ஹா கலக்னாகும் வபீஹா நுயீதுக்கும் வமின்ஹா நுக்ரிஜகும் தாரதன் உக்ரா'* என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.



*உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை*


குழிக்குள் உடலை வைக்கும் போது *பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்* எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: *அஹ்மத் 4982, 51115*


குழிக்குள் உடலை வைக்கும் போது பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 2798


குழிக்குள் உடலை வைக்கும் போது 'பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்' எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அஹ்மத் 4581, 4748

Comments