கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் சொர்க்கமா❓
✅ சரியான செய்தி
தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதுவது சிறப்புக்குரியது என்று வரும் பல செய்திகள் பலவீனமாக இருந்தாலும் இமாம் நஸயீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ராவில் இடம் பெறும் செய்தி கீழே உள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதாக உள்ளது.
ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: சுனனுல் குப்ரா, பாகம்: 6, பக்கம் 30
Comments
Post a Comment